காதல் பரீட்சை - குமரி

கண் பார்த்த பொழுதிலே
கால்கள் நடந்து போச்சு
கால்கள் நடக்கும் முன்னரே
மனசு பறந்து போச்சு...
கடை விழியால் சிரித்ததும்
காதல் நுழைஞ்சு போச்சு
காதல் நுழைந்து தொலைத்ததால்
மோதல் வீட்டில் ஆச்சு...
மோதல் என்று வந்தும்
மோகம் கூடி போச்சு
மோகம் கூடி போனதால்
ஓடல் முடிவு ஆச்சு...
ஓடல் சென்று நின்றது
மூன்று முடிச்சு யாச்சு
முடிச்சு மூணு விழுந்தால்
பேச்சு தீ்ந்து போச்சு...
கெட்டி மேளம் முடிஞ்சதும்
காதல் ஓய்ஞ்சு போச்சு
காதல் ஓய்ஞ்சு போனதால்
மோதல் தினமும் ஆச்சு...
மோதல் வந்த வாழ்க்கையில்
ஊடல் நின்னு போச்சு
ஊடல் நின்னு போனதால்
உள்ளம் உடைஞ்சு போச்சு...
உடைஞ்சு போன உள்ளத்தில்
உசுரு இல்லாத மூச்சு
உசிரு இல்லாத மூச்சினால்
உறவும் முறிஞ்சு போச்சு...
காதல் தேர்வு எழுதினேன்
கனவு தொலைஞ்சு போச்சு
கனவு தொலைஞ்சு போனதால்
காலம் இருண்டு போச்சு...!
************
நன்றி - கவிஞர் கவின் சாரலன் (சங்கரன் அய்யா)
(உங்கள் கருத்தால் பிறந்த கவிதை)