என் இதயம் எங்கே

என் இதயத்தில்
இருப்பது நீதான்
என் இதயமெல்லாம்
நிறைந்திருப்பதும் நீதான்
மொத்தத்தில்
நீதான் என் இதயம்
என்றாள் அவள்...!

அவள் வார்த்தைகளை நம்பி
வெளிநாடு சென்று
திரும்பிய கணவனுக்கு அதிர்ச்சி!
அவள் இப்போது
வேறொரு கணவனுடன்
உல்லாசமாக இருந்தாள்

அவன் கேட்டான்
"நீதானே என் இதயம்
என்றாயே?
இப்போது என்ன செய்கிறாய்?

அலட்சியமாக அவள் சொன்னாள்
"நீ இல்லாத இடைவேளையில்
நான் இதய மாற்று
சத்திர சிகிச்சை
செய்து கொண்டேன்"

எழுதியவர் : சி.பிருந்தா (20-Sep-16, 12:57 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : en ithayam engae
பார்வை : 80

மேலே