காதலே போ, சாதலே வா

செல்லரிக்க
முடியாத
நினைவுகளாய்
காதலியின்
பிரிவுபசாரங்கள்!

செலவழிக்க
முடியாத
சேமிப்புகளாய்
காதலின்
ஞாபகங்கள்!

செக்குமாடாய்
நான்,
சுவற்றில் நிழற்படமாய்
அவள்,
யார் கண்ணிலும் படாமல்
என்
வசந்த மாளிகை!

எழுதியவர் : செல்வமணி (20-Sep-16, 12:12 am)
பார்வை : 112

மேலே