என் காதல் தீராதடி

உன் முகத்தை
மூடி மறைக்கும்
முகமுடியைக்கண்டு
நிலவும் எனை
கொல்லுதடி....
உன் உதட்டில்
பட்ட மலைச்சாரல்
பட்டதால்...
என் உடம்பில்
மின்சாரலாய்
பாயுதடி......
உன் வெட்கத்தையும்
உரமாக்கினால்
என் மனதிலும்
காதல்பயிர்
விளையுமடி....
உன் முத்தத்தை
மருந்தாய் கொடுத்தாலும்
என் காதல்நோய்
தீராதடி....
-ஜ.கு.பாலாஜி-