கவ்வும், காதல்
உன் கண்ணிடை ஒளிர்கையில்
விஸ்தீரணம் என்
விழிக்கோளம்!
உன் மின்னலிடை அசைகையில்
இடி இடிக்கிறது
மனம்.
என் மிதநடை மிளிர்கையில்
விறு விறுவென
உன் வேகநடை.
விழியசைவில் ஒரு சாகசம்
தட தட விரலிடுக்கில்
உன் மனஸ்பரிஸம்.
கமண்டலத்தில் இருந்து கிளம்பி
என்னுள் சரசரவென்று
காதல் ஆவல்.
ராகுவும் கேதுவும் சேர்ந்ததனால்
காலநேரம் காரணமோ
கவ்வுது என்னை, காதல்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
