இப்படிக்கு காதல்

இப்படிக்கு காதல் ...

கடவுளுக்கும்
புதிதுதான் காதல் ..
எத்தனை
யுகங்களாய்
ஓர் உயிரின்
இரு மனங்கள் ..
இரு உயிரின்
ஓர் மனம் ...
தானாக
உருவாகி
படைத்தவனையும் அடிமையாக்கும்
அன்பின் கலாச்சாரம் ..
தானாக
உருவாகி
ஆயிரம் ஜென்மங்களாய்
அதிசயம் செய்யும்
பந்தம்
காதல் காதல் காதல் ...
முடிச்சுக்கு
முன்னோ
பின்னோ
காலம்
தீர்மானிக்கும்
ஆனால்
என்றும் மாறாது
காதல் ........
காதலியாய்
மனைவியாய் ...
எங்கள்
பிறப்பின்
ஜென்மங்களை எண்ணவேண்டாம்
அது கடவுளுக்கும்
புதிது..

இப்படிக்கு
காதல் ...


*மருதுபாண்டியன். க

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (23-Sep-16, 8:56 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 181

மேலே