உன் மடியில் என் மரணம்

உன் மடியில் என் மரணம்.....

என் விழியோடு உன் விழிகள் கலந்திட வேண்டுமடா
என் விரலோடு உன் விரல்கள் இணைந்திட வேண்டுமடா
என் இதழும் உன் இதழும் சங்கமிக்க வேண்டுமடா
அந்த நொடி என் வாழ்வின் இறுதி நொடியாய்
மாறிட வேண்டுமடா.....

என் இதயத்தின் துடிப்பு உன் இதயத்தில் நானும்
கேட்டிட வேண்டுமடா....
என் உயிரோடு உன் சுவாசம் புகுந்திட வேண்டுமடா
என் மூச்சு காற்று என்னை விட்டு விலகும் நிமிடம்
உன் கரத்தின் மேல் மழலையாய் நானும்
தவழ்ந்திட வேண்டுமடா....

உன் விழியின் துளிகள் என் நெற்றியில் நீ இடும்
திலகமாய் மாறிட வேண்டுமடா...
உன் இதயத்துடிப்பின் ஓசை என் இறுதி தாலாட்டாய்
எனை சீராட்டிட வேண்டுமடா....
என் வாழ்வின் இறுதி துடிப்பு அப்படியே
உறைந்திட வேண்டுமடா....

உன் கண்ணுக்குள் என் உருவம் நானும்
கண்டிட வேண்டுமடா...
உன் கண்ணீர் துளிகள் என் உடலை நனைத்திடும்
அந்த நொடியிலே நானும் என் உயிரை
உன் மடியில் துறந்திட வேண்டுமடா....

எழுதியவர் : அன்புடன் சகி (23-Sep-16, 9:28 pm)
பார்வை : 710

மேலே