பாபா

குருவே
குருவின் குருவே

நம்பிக்கையின் உருவே
பொறுமையின் வடிவே

கற்பக தருவே
கருணை கடலே

வேத விளக்கமே
வாழ்வின் திருப்பமே

தியான சொரூபமே
மும்மூர்த்தின் ரூபமே

ராமனும் நீயே
ரஹீமும் நீயே
சம்சார சமுத்திரம்
கடக்க செய்வாயே
உன் பெயர் சொல்ல
பிறவி அறுப்பாயே

பாபா என்றால்
பாக்கியம் அருளுமே
பாதம் தொழ
பாவம் தீருமே

வரம் வேண்டுமே
தர வேண்டுமே
உன் நின்னைவே
வரமாய் தர வேண்டுமே

ரா தி ஜெகன்

எழுதியவர் : ரா தி ஜெகன் (24-Sep-16, 7:43 am)
Tanglish : papa
பார்வை : 683

மேலே