வலி

சக மனிதர்களின்
குதுகலங்கள்
எனை கவரவில்லை,
கரையை
சவட்டி விட்டு போகும்,
கடல் அலைகள்
எனை ஈர்க்கவில்லை
நான் மட்டும் தனியனாய்
உணர்கிறேன்,
பகலில் சூரியனாக!
நட்சத்திர கூட்டங்கள்
நடுவிலும்
இரவில் சந்திரனாக!
நொடிகளோ
நாட்களாக நீள்கின்றது!
என் சித்தத்தில்
ஏற்பட்ட இந்த
சித்து விளையாட்டை
துவக்கி வைத்துவிட்டு
சிங்காரமாய்
நகர்ந்துவிட்டாய்
உன் நினைவுகள்
நகர மறுக்கின்றது
என்னுள் இருந்து
இந்த தனிமை
சாபத்திற்கு,
விமோசனம்
நீ மட்டுமே
என்பது புரிகின்றது
நீ எனக்கு இல்லை
என்ற உண்மைதான்
உள்ளங் காலில்
குடிபுகுந்த முள்ளாய்
உறுத்துகின்றது வலியோடு!
#sof #sekar.