எனை விட்டு சென்றாலே

அடை மழை
அடிக்கல
பூகம்பம் வெடிக்கல
சூரியன் மறையல
சந்திரன் சாயல
ஆனா
மனம் அரண்டு போய்
இருண்டு போய் கிடக்குது
பெண்ணே நீ போன
பின்னே.......
மாதம்
மாதமாய் கருவில்
வளர்ந்து தரையில் பிறந்து
தலை நிமிர்ந்து வளர்ந்த
எனை
ஒரு நொடியில்
ஒரு வார்த்தையில்
கொன்றாயே ..........
நீயே நீயே
தேடி தேடி வந்தாயே
பின் ஏனோ ஏனோ
எனை
விட்டு சென்றாயோ ........
கனவிலும் நினைவிலும்
உன் முகம் வந்து வந்து
காலனாய் எனை கொல்ல
கத்தி இன்றி ரத்தம் இன்றி
கதற கதற கொன்றாயே
குற்றமில்லா கொலைகாரி நீ
எனை ...........
காதல் நீதிமன்றத்தில்
காதலி நீ நீதிபதியாய்
காதலன் எனக்கு மரண தண்டனை
தந்தாயே ................
சூரியனும் சந்திரனும் இல்லாத
வானமும் பூமியும்
இருண்டு போகுமோ
இல்லையோ எனக்கு தெரியாது
பெண்னே
நீ இல்லாத வாழ்க்கை
என்றும் இருண்டு போகும்
கண்ணே !