உயிராக

உன்னை கண்டு
நான் மிகவும் பெருமை படுகிறேன்
உனக்கு கொடுத்த வாழ்க்கை
சற்றும் தயக்கமின்றி
உன் தோழி
மரண தேவதையிடம்
கொடுத்து விட்டாயே...

உன்னை போல்
உன் தோழி மரணதேவதையும்
கைவிட்டால் நான் எங்கு செல்வேன்..?

என்னை சுற்றி
கண்ணீர் குளமாய் இருந்தாலும்
நான் கண்டதில்லை
துள்ளம் மீனாய் - உன்னை

பைத்தியக்காரன் நான்
என் இதயத்திற்கு தூண்டில் போட்டதும் நீ தான்
எடுத்த இதயத்தை துடிக்கடித்ததும் நீ தான்

துடித்த இதயத்தோடு செல்கிறேன்
உன் தோழி மரண தேவதையின்
கை பிடித்து...
அவளாவது
என் இதயத்தை
பிடித்து செல்லட்டும் உயிராக....

-ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (24-Sep-16, 4:19 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : uyiraaga
பார்வை : 430

மேலே