தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 8--முஹம்மத் ஸர்பான்

71.கனவின் காட்டுக்குள் விதைத்த விதைகள்
நினைவின் தோட்டத்தில் முளைக்கும் சிலுவைகள்

72.பூக்களின் மகரந்தம் தேனீக்கு அமுதையும்
காற்றுக்கு மணிகளையும் தானம் செய்கின்றன.

73.பசுமை மரத்தின் சோகக் கதையை
வேரிடம் கேட்டு கிளைகள் அழுகின்றன

74.வாழ்க்கை எனும் புத்தகத்தில் கிழிக்காமல்
மறைக்கப்பட்ட பக்கங்கள் தான் ஏராளம்

75.பொழுதும் கனவாக கரைந்து போய்க் கொண்டிருக்கிறது
நினைவின் காயங்களின் மேல் இரத்தம் சிந்துவதால்....,

76.பலரின் நேசம் காலம் நகர்ந்து
செல்லும் நேரம் மறைந்து விடும்.
சிலரின் நேசம் புயல் வந்தும்
விழாத மரம் போல் வாழ்க்கை
முடியும் வரை மாறாதிருக்கும்..,

77.எண்ணற்ற எண்ணங்கள் கொட்டிக் கிடக்கும்
உலகின் மேடையில் வண்ணங்கள் தட்டுப்பாடு

78.காத்திருப்பான வாழ்க்கை எதிர்பாராத நிகழ்வுகளில்
பூக்களின் நிலத்தில் சிலுவைகள் ஏந்திச் செல்கின்றன..,

79.முற்றுப் பெற்ற வாழ்க்கையின் அகராதியில்
சரி,பிழை பார்க்கும் கல்லறை தேர்வறையில்
எட்டி மிதித்த எறும்பும் பாம்பாய் கொத்துகிறது.

80.கை விட்டுச் சென்ற பாழ்நிலத்தில் முளைத்த
விதைகள் நினைவை அறுவடை செய்கின்றன..,

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (26-Sep-16, 11:47 am)
பார்வை : 147

மேலே