தோழியே

தோழியே நீ
மட்டும் இல்லயென்றால்
தோல்வி வரும் போதெல்லாம் துவண்டு
போயிருப்பேன்.....
என் மனச்சுமைகளின்
பாரம் தாங்காது
இதயமே நின்றிருக்கும்...
அன்று நான் கண்ட
கனவுகளும் நிறமற்றுப்
போயிருக்கும்டி...
தோழியே...

துடுப்பில்லா தோணியாய்
தத்தளித்த நானோ
வாழ்வின் சறுக்கல்களில்
என்னை தொலைத்திருப்பேனடி...
யார் என்னை வெறுத்தாலும் நீ மட்டும்
என்னை உன்
அன்பாலே கட்டிப்போட்டாயடி...

தோழி நீ மட்டும்
இல்லையென்றால் நான்
வெறும் காகிதமாகவே
வாழ்த்திருப்பேன்..
பச்சை புல்லும்
என் முகம் பாராது...
நிலவும் கூட
முகம் காட்ட
நிபந்தனை விதிக்கும்..

தோழியே நீ
மட்டும் இல்லையென்றால்
மொத்தத்தில் நானாகவே
இருந்திருக்கமாட்டேன்...
உயிரிருந்தும் வெறும்
ஜடமாக அலைந்திருப்பேன்..

எழுதியவர் : பச்சைபனிமலர் (26-Sep-16, 11:17 am)
Tanglish : thozhiye
பார்வை : 309

மேலே