ஐந்து தலை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
ஐந்துதலை பத்துக்கை ஐயன் விநாயகர்
ஏந்தியுள்ள ஆயுதங்கள் அத்தனையும் - மாந்தரின்
தீவினையைத் தூளாக்கும்; தூயவனை நித்தமும்
நாவினிக்கப் பாடித் துதி! 1
நிற்கின்றார் நிற்கின்றார் ஐந்துதலை அண்ணலும்
நிற்கின்றார்; கையில் கதாயுதம் - அற்புதமாய்
வைத்தே அழகாக நிற்கும் விநாயகனை
ஏத்திடுவாய் என்றும் இனிது! 2
ஐந்துதலை அண்ணலும் நிற்கின்றார் பத்துகையில்
ஏந்தியுள்ள ஆயுதங்கள் ஏராளம்
தீவினையைத் தூளாக்கும்; தூயவனை உந்தனது
ஆவியுள்ள காலமெலாம் போற்று! - சவலை வெண்பா