சாமி குத்தம்

காது குத்துக்கு வந்தவர்களுக்கு
கிடாய் வெட்டிய பூசாரிமீது கடுங்கோபம்!
வெட்டிய கிடாவின் கழுத்தை ஒட்ட வெட்டாமல்
சற்று விட்டு வெட்டிவிட்டாராம்..!
கிளி பிள்ளைபோல் சொன்னதையே
சொல்லிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துப்
பூசாரி சொன்னார் – “அட விடுங்கப்பா…
மனுஷன வெட்டியே பழக்கப்பட்டவனப்போயி..
ஆட்ட வெட்டச்சொன்னா எப்படி….?”
பிறகென்ன - அவிழ்ந்த கோவணங்களை
கையில் பிடித்தபடியே ஓடி
பந்திக்கு முந்திக்கொண்டிருந்தார்கள்
கோபப்பட்ட கோணாங்கிகள்.

எழுதியவர் : சாய்மாறன் (26-Sep-16, 12:06 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 52

மேலே