ஐந்து தலை நாகம் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

அண்ணல் விநாயகனை ஐந்துதலை நாகம்தான்
கண்போ லவேகுடை யாய்விரிந்து - தண்ணிழலாய்க்
காத்திருக்க அண்ணலின் பேரருளைச் சொல்லியே
சாத்தினேன் பாமாலை இன்று! 1

ஐந்துதலை நாகம்தான் கண்போ லவேஇங்கு
பாந்தமாய்க் காக்கின்றான்; பார்புகழும் - வேந்தனென
யானைமுகன் கையில் அபயம்காட் டும்நாதன்
பானை வயிற்றோனைப் பாடு! 2

ஐந்துதலை நாகம் குடைபிடிக்க நாதனும்
சாந்த சொரூபியாய் சஞ்சலங்கள் - மாந்தர்க்கு
தீர்த்தே மனத்துணிவைத் தந்திடுவான்; மாறாது
மூர்த்தி யவனை வணங்கு! 3

ஐந்துதலை நாகம்தான் கண்போ லவேஇங்கு
பாந்தமாய்க் காக்கின்றான்; பார்புகழும் - வேந்தனென
யானைமுகன் கையில் கதைபிடித்து நிற்கின்ற
பானை வயிற்றோனைப் பாடு! 4

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-16, 1:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே