முத்தமிழே வாழி
முத்தெனவே ஒளிவீசும் முத்தமிழே வாழி!
எத்திக்கும் புகழ்மணக்கும் இளந்தமிழே வாழி!
பித்தத்தைப் போக்குகின்ற பூந்தமிழே வாழி!
சித்தத்தில் சேர்ந்திருக்கும் செந்தமிழே வாழி!
சுத்தசிவ சன்மார்க்கம் சொன்னமொழி வாழி!
புத்தியினை புதுப்பிக்கும் பொற்றமிழே வாழி!
சித்தர்களை சேர்ந்திருந்த செழுந்தமிழே வாழி!
உத்தமர்கள் உள்ளத்திலே உலவுந்தமிழ் வாழி!
வித்தகர்கள் விரல்களிலே விளையுந்தமிழ் வாழி!
மத்தெனவே மனம்கடையும் மறத்தமிழே வாழி!
தித்திப்பாய் தினம்திகழும் தீந்தமிழே வாழி!
இத்தரையின் இன்மொழியே வாழிவாழி!
பாவலர். பாஸ்கரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
