பெண்மேகம்
பெண்ணே நீ
வெண்மேகமா!?
இல்லை
பெண்மேகமா!!??
உன் அசைவுகள்
அனைத்தையும்
எண்ணிகொண்டு
மெய்சிலிர்க்கிறேன்!!!
இவ்வாறு;
"பெண்ணே" நீ
என்னை கடக்கும் போது
என் மனம் மழையில்
நனைகின்றது!,
நீ என்னை
தொட்டு போகும் போது
என் உள்ளம் எங்கும்
புது உணர்வுகள்
பொங்குகின்றது!!,
நீ என்னை
உரசி செல்லும் போது
ஒளிகொண்ட நான்
ஒளிந்து போகிறேன்
உன்னால்
ஒன்றும்
இல்லாமல்!!!,
உன் கார்மேக
கூந்நலை காண
என் இரு கண்கள்
போதவில்லை!!!
இனியவளே
உன்னை காணதவரை
இயற்கை மட்டும்
தான் அழகு என்று
நினைத்திருந்தேன்!!!!!
ஆனால்
இன்று கண்டுவிட்டேன்
உன் அழகை கண்டு
இயற்கையே இயங்காமல்
நிற்கும் என்று...!!