நண்பன்
நட்பு என்னும் தோட்டத்தில்
எனக்காக பூத்த என் பூவே !
வாடி விடாதே !
வருந்தி விடுவேன் !
நட்பு என்னும் காற்றில்
எனக்காக வீசிய என் தென்றல் காற்றே !
சென்று விடாதே !
சிலையாகி விடுவேன்!
நட்பு என்னும் காட்டில்
எனக்காக பிறந்தவனே !
பிரிந்து விடாதே !
பிறவியே இல்லாமல் ஆகிடுவேன் !
நட்பு என்னும் வகுப்பில்
எனக்காக வந்தவனே !
திரும்பி பார்!
திகைத்து நிற்கிறேன் !
நட்பு என்னும் குடும்பத்தில்
எனக்காக பிறந்த சூரியனே !
சுற்றி வருகிறேன்!முகம்
சுளித்து விடாதே !
நட்பு என்னும் நாடகத்தில்
முதல் பரிசு எனக்கு !
என்? என்றால்
உன் நட்பை பற்றி கூறியதால் !
வார்த்தை ஒன்றை கேட்கவே !
வாய்மூடி நிற்கிறேன் !
பேசிவிட்டு சென்றால்
பேரின்பம் அடைவேன் !
உன் புன்னகையினை பார்த்து !