உறவுகளின் பாசங்கள்

தாய் என் மேல் காட்டிய அன்பில்
நெகிழ்ந்து போனேன்...
தந்தை என் மேல் காட்டிய பாசத்தில்
உருகி போனேன்...
தாத்தாவின் வழிகாட்டுதலில்
உலகை அறிந்தேன்..
பாட்டியின் கதையில்
வரலாறை தெரிந்து கொண்டேன்..
அண்ணனின் அக்கறையில்
உரிமையை புரிந்து கொண்டேன்..
சகோதரியின் ஆறுதலில்
உறவில் தெளிவு அடைந்தேன்..
தோழியின் அரவணைப்பில்
தோல்வியில் இருந்து
மீண்டு வந்தேன்...
தோழனின் பேச்சில்
தைரியம் கொண்டேன்...
ஆசிரியரின் உதாரணங்களில்
தெளிவு கொண்டேன்...
வாழ்கை துனையின் அன்பில்
பூரித்து போனேன்...
வாழ்கை எனக்கு பல உறவுகளை கொடுத்தது...
அந்த உறவுகள் எனக்கு வாழ
சொல்லி கொடுத்தது....