உறவுகள்

உறவுகள்
==========
உறவுகளை அறிய வேண்டுமா? கொஞ்சம்
உரிமையோடு கேட்டுப் பாருங்கள் பணம் !!!
உறிஞ்சுவதாக எண்ணி ஓடி விடுவார்கள்
உங்களிடம் இருந்தால் மட்டுமே பணம் !!!
உற்பத்தி செய்ய மரம் இருந்தால்
உன்னதமாக இருக்கும் பணம் !!!
உலகத்தில் நம்மை ஈனமாக்குவதும்
உயர்த்துவதும் நம்மிடம் இருக்கும் பணமே !!
உதடுகள் சிரிக்க வார்த்தைகள்
உள்ளம் கொப்புளிக்க சூடுகள்
உறவுகள் மறக்க பிரயத்தனங்கள்
உற்சாகம் உடைக்கும் பலூன்கள்
உண்மையில் சொல்லப் போனால்
உறவுகளே இல்லை என்றால் நலமே
உறவுகள் இருந்தும் இல்லை என்பது
உள்ளம் உடையும் கொடுமை
*************ஆக்கம் ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு )