நட்பின் பரிசு
என்னுள் ஓர்ஆயிரம் கேள்விகள்
பதில் தெரியாத குழந்தையாய்
குழம்பிட விடையாக நீ !
என்னுள் மாற்றங்கள் செய்தாய்,
புதிய பாதைகள் தந்தாய்,
மீண்டும் புன்னகை விதைத்தாய்!
காதல் தான் சிறந்தது
எனும் என் பார்வையில்
நட்பின் அழகை மனதில்
காவியமாக்கினாய்!
என்றும் பிரிவென்பது இல்லை,
என நினைத்து இருந்தேன்.!
உனக்காய் துடிக்கும் நான்
வேண்டாம் என ஏனோ
நீயும் என்னை வாடினாய்
உலகே மயணமாய் போகிட
ஏன் இந்த பிரிவு
என்றே நான் எங்கிட.
உனது மாற்றத்தின் நிழலாய்
அவன் முகம் கண்டேன்,
அவரோடு! நீ வாழ்ந்திட
நம் நட்பே உனக்கான
என் திருமண பரிசு
அன்பு தோழி!
தோழன்
-வினோ
(சொல்லிருக்கலாம் ல )