புருசனும் பொண்டாட்டியும் 3 வகைங்க
மூன்று வகை தம்பதிகள்…
குடும்பத்தலைவர் மாலையில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகிறார். வழியில் இருந்த கண்ணாடி பாத்திரம் அவர் கால்பட்டு உடைந்து விடுகிறது”
(1)அதம வகை,(இருவருமே விட்டுக்கொடுப்பதில்லை):
கணவன்:“உனக்கு அறிவிருக்கிறதா? கண்ணாடி பாத்திரத்தை வழியில் வைத்திருக்கிறாயே.”
மனைவி:“நீங்க பாத்து வரவேண்டியதுதானே. கண்ணு என்ன அவிஞ்ஜா போச்சி.”
(2)மத்திம வகை.( யாராவது ஒருவர் விட்டுக்கொடுப்பது).
கணவன்:“கண்ணாடி பாத்திரத்தை வழியிலா வைப்பது,முட்டாள்,
மனைவி :” தவறுதான், மன்னித்துவிடுங்கள்.
(அல்லது)
மனைவி :“ஏங்க பாத்து வரக்கூடாது ?
கணவன்:"தவறு செய்து விட்டேன் . மன்னித்துவிடு.”
(3)உத்தம வகை-(இருவரும் விட்டுக்கொடுப்பது)
கணவன்:“அடாடா. நான் பார்த்து வந்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காதே.”
மனைவி :“தவறு என்னுடையததுதான். கண்ணாடி பாத்திரத்தை வழியில் வைத்திருக்க கூடாது,”
இது புது வகை…
“அடாடா, நான் பார்த்து வந்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காதே.”
மனைவி :“நீங்க என்னிக்கிதான் பார்த்து வந்தீங்க, உங்களுக்கு தான் கடவுள் கண்ண பிடரியல வச்சுட்டானே.”