எழுத்து கவிஞர் இரா இரவி

எழுத்து !

கவிஞர் இரா .இரவி !


மனிதகுலம் அறிவு பெற்றவுடன் வடித்தது
மகத்தான எழுத்து மறக்க முடியாதது !

உலகப் பொது மறையை அழியாமல் நமக்கு
உருப்படியாகத் தந்தது ஓலைச் சுவடி எழுத்து !

கம்ப இராமாயணம் சிலப்பதிகாரம் உள்ளிட்ட
கற்கண்டு இலக்கியம் உணர்த்தியது எழுத்து!

வாசிக்கும் பழக்கம் பலருக்கு வந்ததற்கும்
வானளாவ புகழ் கிடைக்கக் காரணம் எழுத்து !

காதல் கடிதம் எழுதுவதற்கு அன்றும் இன்றும்
காதலர்களுக்கு துணை நின்றது எழுத்து!

ஒரு எழுத்து மாறி அன்று பொருள் கொண்டதால்
உலகப் போர் நிகழ்ந்த வரலாறும் உண்டு !

எழுத்தை அறிவித்தவன் இறைவன் என்று
இயம்பிடும் அளவிற்கு உயர்ந்தது எழுத்து !

எழுத்து அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை
என்பது முக்கியமான புள்ளி விபரம் இன்று !

எழுத படிக்கத் தெரிந்தவர்கள் என்ணிக்கை
இன்று உயர்ந்திடக் காரணம் எழுத்து !

குழந்தைகள் முதன் முதலில் நெல்லில்
குதூகலமாக எழுதி பார்ப்பதும் எழுத்து !

ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை
ஆர்வமாகப் பார்க்க வைத்தது எழுத்து !

அடிமை விலங்கை முறித்துப் போட்டு
அனைவருக்கும் விடுதலை தந்தது எழுத்து !

மக்களாட்சியின் நான்காவது தூணாக
மக்களைக் காக்கும் அரண் எழுத்து !

வாகன இயக்குபவர்களுக்கு சரியான
வழியினை சாலையில் காட்டுவது எழுத்து !

கணினி வந்த பிறகும் அனைவருக்கும்
கணினியில் துணை நிற்பதும் எழுத்து !

பார்வையற்றவர்கள் விரலால் தடவி
படிப்பதற்குத் துணை நிற்பதும் எழுத்து !

காட்டுமிராண்டியாக இருந்த மனிதனை
கல்வி கற்ற மனிதனாக மாற்றியது எழுத்து !

தலைஎழுத்து என்ற ஒன்று இல்லவே இல்லை
தவறான கற்பனைக் கற்பிதம் தலை எழுத்து !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (4-Oct-16, 5:21 pm)
பார்வை : 48

மேலே