பேனா முனையில் பெண்மையின் துளிகள்-துளி-02

பேனா முனையில் பெண்மையின் துளிகள்.......

துளி....02....

அடர் மரங்களும் செடி கொடிகளும்
சூழ்ந்த காட்டின் நடுவில்....
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்
காம வெறி கொண்ட வேங்கை ஒன்று
கன்னியவளின் பெண்மையை
ஈவு இரக்கமன்றி களவாடியது...

அவள் கைகளும் கால்களும் கட்டப்பட்டு
அவளின் ஆடைகள் களையப்பட்டு...
அவள் கற்பை பறித்த காமுகன்
உதிரம் வழிய அவள் உயிரையும்
பறித்தான்....
போராடிய பெண்மையும் உயிர்
துறந்து...
மண்ணுக்குள் மண்ணாக மடிந்து
போனது...
அவள் கண்ட கனவுகள் அனைத்தும்
கல்லறையில் வாசம் செய்திடும்
காகித பூவாக மாறிப்போனது....

இத்தனைக்கும் அவள் செய்த பாவம்
தான் என்னவோ....??
பெண்ணாக பிறந்தது பாவமா....??
இல்லை....உடன் பிறந்த அண்ணனை நம்பி
அவனோடு அவள் சென்றது தான் குற்றமா....??
அண்ணா...அண்ணா...என்று மனம் மலர அழைத்தவளின்
பூ உடலை சிதைத்து விட்டான் அண்ணண் அவனும்...
வேலியாய் இருந்து காக்க வேண்டியவன்....
சகோதர பாசம் மறந்து...காமம் தலை தூக்க..
சொந்த தங்கையையே கொன்று புதைத்துவிட்டான்...

அவன் கொன்றது அவள் உடலை மட்டுமல்ல...
அவள் அவன் மீது கொண்ட பாசத்தை...
அவன் பெற்றோர்கள் கொண்ட நம்பிக்கையை....
அண்ணண் என்ற புனிதமான உறவை...
ஆண் என்ற அவன் அடையாளத்தை...
அனைத்தையும் ஒரு நொடியிலே கொன்றுவிட்டான்...

அவளை கதற கதற கற்பழித்தவனுக்கு...
ஒரு நொடி கூட தோன்றவில்லை அவள் தன் தங்கை என்று...
ஆனால் அந்த பெண்மை தன் கன்னித்தன்மையை இழந்து
சுவாசம் இழக்கும் வேளையிலும் அண்ணா என்று அழைத்தவாறே
மண்ணகம் துறந்தது....

கொடூர செயலினை புரிந்த அவனுக்கு
தண்டனை கிடைத்திடுமா....??
கிடைத்தாலும் அந்த பெண்மை உயிர்த்தெழுந்திடுமா.....???
நான்கு நாட்கள் நாலு பேர் கதைப்பார்கள்....
மறுநாள்...அவளை புதைத்த இடத்திலே
புற்கள் முளைத்துவிடும்...
காற்றோடு காற்றாக இந்த சம்பவமும்
மறைந்துவிடும்.....

அவன் தனக்கான வாழ்க்கையை எங்கோ
ஒரு மூலையிலே கழித்திடுவான்...
இவள் போன்ற எத்தனையோ பெண்கள்
அவன் கையால் தினம் தினம்
செத்துக்கொண்டிருப்பார்கள்.......
எதுவும் என்றும் மாறப்போவதில்லை....
இது போன்ற நிகழ்வுகள் என்றுமே தொடர்கதையாய்
நிகழ்வதை தவிர...

இதை நான் கவிதையாக எழுதவில்லை....என் உணர்வுகளை....என் மனதின் கேள்விகளை....உண்மை நிகழ்வுகளை அப்பிடியே கூறியுள்ளேன்....உங்கள் ஆதரவோடு துளிகள் தொடரும்......

-உதயசகி-

எழுதியவர் : அன்புடன் சகி (4-Oct-16, 5:45 pm)
பார்வை : 269

மேலே