தோழியென நீ

நான் சாயும்
நேரங்களில்
தோளுயர்த்தி தோள்
கொடுத்தாய்;
நான் தூங்கும்
நேரங்களில்
தாயாய் மாறி மடி
கொடுத்தாய்;
நான் ஓயும்
நேரங்களில்
குழந்தையாகமாறி புத்துணர்வு
கொடுத்தாய்;
நான் வாடும்
பொழுதுகளில்
மாரியாய் பொழிந்து
பூக்கச் செய்கிறாய்;
எனக்கென பிரம்மன்
படைத்து;
புவியில் புத்துயிர் பெற்ற
தேவதையாய் நிற்கிறாயே;
நீ யார்?
தோழியா?
இல்லை தாயா?
விடையிலா கேள்விக்கு
பதில் தேடும்
சிறுவனாக நான்!

எழுதியவர் : சங்கேஷ் (4-Oct-16, 8:06 pm)
பார்வை : 982

மேலே