என் செல்ல தங்கை

என் செல்ல தங்கை தியாவிற்கு........

புன்னகை வாசம் செய்யும் அவள் முகத்தில்
பூமணம் சுவாசம் செய்யும் அவள் அகத்தில்
சொல்லிடவோ வார்த்தையில்லை என்னிடத்தில்
அவள் போல் தங்கை கண்டதில்லை நானும் இவ்வுலகில்...

பூங்குழல் முன்விட்டு பூலோகம் மயக்கிடுவாள்
தெத்திப்பல் சிரிப்பாலே தேவலோகம் ஆண்டிடுவாள்...
தெவிட்டாத மொழியிலே தெம்மாங்கும் பாடிடுவாள்...
திகட்டாத மொழியாலே எனை திகைப்படைய செய்திடுவாள்....

துயர் கொண்டு நானும் தவிக்கையிலே மடி சாய்த்து
என் தாயாக அவளும் மாறிடுவாள்....
விழி கலங்கி நானும் நிற்கையிலே தன் தோள் சாய்த்து
என் உயிர்த்தோழியாய் அவளும் நின்றிடுவாள்...

காலம் முழுதும் அவள் அன்பொன்றே எனக்கும் போதுமே
என் காலம் முடிந்தும் அவள் நினைவில் நான் வாழ்ந்தால்
இனியொரு ஜென்மம் எனக்கும் வேண்டாமே...
அவள் நிழலாக இணைந்தே என் உயிரும் அவள் உறவாய்
வாழ்ந்திடுமே....

எழுதியவர் : அன்புடன் சகி (5-Oct-16, 8:55 pm)
Tanglish : en sella thangai
பார்வை : 3608

மேலே