உதயநாள் நல் வாழ்த்துக்கள் தோழி 555

என் தோழியே...

சுற்றும் பூமி சுற்றும்வரை சுழற்சி
என்பது எப்போதும் உண்டு...

வாழ்க்கையின் வட்டம்கூட சக்கரம்போல்
எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும்...

இன்பமும் துன்பமும்
மாறிமாறி தோன்றி...

தினந்தோறும் உன்னை
திசைமாற்றும்...

பல நேரங்களில்
உன்னை பயமுறுத்தும்...

என் தோழியே நீ பொறுமையோடு
போராடினால்...

எதிர்வரும் எந்நாளும்
பெருமைதான் உனக்கு...

இந்நாளில் நீ புது
பயணம் தொடங்கு.....

***என்னுயிர் தோழிக்கு இனிய உதயநாள் நல் வாழ்த்துக்கள்***

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Oct-16, 8:50 pm)
பார்வை : 297

மேலே