பள்ளித் தோழி - கற்குவேல் பா

கை நழுவி விழுந்து உடைந்த
முட்டைப் பொட்டலத்தை,
உற்றுப்பார்த்தவாறே அழுது கொண்டிருந்த நீயும்;
தான் வாங்கிய முட்டைகளை உன் கையில் திணித்தே,
நொடிப்பொழுதில் நகர்ந்து,
வாங்கிய முட்டைகள் உடைந்ததாய் பொய்யுயுரைத்து,
தந்தை பின் தாய் என
மாறிமாறி முதுகில் கொடுத்ததை வாங்கிக் கொண்டு,
உன்னைக் காணும் நேரங்களிலெல்லாம்,
சிறுபுன்னகை உதிர்த்து நகர்ந்த நானும்,
நண்பர்கள் எனப்படலாம் !

#பள்ளித்_தோழியே

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (7-Oct-16, 1:35 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 358

மேலே