அன்னை அன்பு
அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில் அன்பின் அகராதியை எனக்கு அறிமுகப்படுத்திய அன்னையே.....!
மட்டு நகர் மண்ணில் என்
வாழ்கையின் கடைசி நாளில்
என் ஆவி அடங்கும் தருணம்
தாயே உன் மடி கிடைக்குமா
என்ற கேள்வியோடு நகர்கிறது
என் வாழ்க்கை.....!
சிறு வயதில் சிறு தவறுக்கு
பெரும் அடி தந்த தந்தைக்கும் எனக்கும் நடுவில் நீ வந்து
என்னை தூக்கிக் கொண்டு ஒடிப்போய் மாமரத்துக்கு பின்னால் ஒளிய விட்டதை மறந்திடுமா என் மனது....?
எனது சிறு சிறு வெற்றிகளுக்கு கோப்பைகள் கொடுத்த
உனது கைகளை
தேடுகிறது மனது
உன் கையால் எனக்கு உணவு ஊட்டி விடமாட்டாயா என்ற ஏக்கத்தில் தத்தளிக்கிறது
என் மன உயிர்....!
இப்போதெல்லாம் உன் புகைப்படம் பார்த்து தொலைபேசியின் ஒலிகாத்து பல மாதங்களாய் போதிமரப் புத்தனாகின்றேன் வீட்டுத் திண்ணையில்.....!
எனக்கு உன் அருகாமை இல்லாதது காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள் நுழைந்து வாழ்வது போன்று வெறுமையாகத்தான் இருக்கிறது அன்னையே.......!
போலியில்லா உன்
முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கு.!
இந்த காதல் வாழ்க்கை
தான் வலுக்கட்டாயமாய் என் சிறகுகளைப் பிடுங்கி
என்னை வேறு இடத்திற்கு
அழைத்துச் சென்றிருக்கிறது....!
நானோ மட்டுநகர் மண்ணில்
வாழ்ந்து கொண்டு என் அன்பு அன்னையை தேடுகிறேன்
தேடலின் பலன் கிடைக்காதா என்ற நிராசையில்......?
சி.பிருந்தா
மட்டக்களப்பு