அம்மா கருவறை

இருவரின் கூட்டு முயற்சி
இரண்டு நிமிட இன்பம்
இரண்டு துளி வெண்மணி
பயணிப்பதோ பல மணி .....!

இறுதியாய் உறை வது
சூரியன் புகா நிலவறை
உண்டு உறங்க ஓர் அறை
சுவாசிக்க ஓர் உறை ...!

சுதந்திரமாக வாழும் பாசச்சிறை
ஒன்பது மாதம் வசிப்பதுதான் முறை
அதற்க்கு மேல் வாடகை கொடுத்தாலும்
இருக்கமுடியாது என்பது பெருங்குறை....!

கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை
விலைமதிப்பில்லா ஓர் அறை
இத்தனை சிறிய சான் இடம்
இதற்குள் உறைவது எத்தனை
பெரிய மானுடம் ..!!!

எழுதியவர் : சி.பிருந்தா (5-Oct-16, 1:29 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : amma karuvarai
பார்வை : 257

மேலே