அம்மா கவிதை
முகத்தை பார்க்கும் முன்பே பாசத்தை காட்டினாள் அம்மா !!!
பாலோடு பாசத்தை ஊட்டி
பட்டினி கிடந்தது பசிபோக்கி !
பட்டணம் அனுப்பி படிப்பளித்த தாய்
பாவம் செய்தாலோ !!!
தத்தளிக்கும் தண்ணீரில் தாமரை சிக்கியது!!
தவமிருந்து பெற்றவன்
கண்ணீரில் தள்ளினான்
கணவன் எனும் கையாளாய் மாறி
கை நீட்டினான் !!
அன்பு காட்டியதால் அழுகை மிச்சமா
பாசம் காட்டியதால் பாவம் செய்தேனா!!!
கொண்டவள் சொல் கேட்டு
என் குமரன் மாமியாருக்கு விருந்தளிக்க !!
தாயோ வாசலில் வந்துநிற்க
உள்ளே அழைக்க வார்த்தை திக்க
நாய் போல காத்திருக்க
பேய் போல பேசயிலே
ஆறுதல் கூற கூட நாதியில்லை
பட்டினி கிடந்து படிப்பளித்த தாய்
பாவம் செய்தாலோ !!!!!