புரட்சி தலைவி

அன்புள்ள அம்மா உன் ஆட்சிக்கு இனி மாற்றமில்லை உன் நற்செயலுக்கு சாட்சியும் கணக்கில்லை !!
உனக்கு வகுத்தது இரட்டை இலை நீ தமிழகம் பெற்றெடுத்த பெண் பிள்ளை !!

உன் பாசத்திற்கு இணையில்லை உன்னால் பசி என்ற வார்த்தையே இல்லை !!!

வந்தாரை வாழ வைப்பது தமிழ் நாடு வளர்வோரை ஊக்குவிப்பது உன் செயல்பாடு

பூத்திருந்தது மல்லி மாலைக்காக காத்திருந்தது புரட்சித்தலைவி உன் பெயருக்காக

நீ சொல்வதில்லை எதையும் பேறுக்காக எத்தனை நல் திட்டம் வகுத்தாய் எம் ஊருக்காக

பகைமை மறக்க பசுமை திட்டம் !
சாதி மறக்க சமத்துவபுரம் !

உயிர் வாழ நீரும் !
பசி ஆற சோறும் !
படிப்பிறப்பிக்கு சமசீரும் !
பகுத்தளித்த தாய் !
பத்து மாதம் சுமந்தத்தை விட மேலானவள் !!!

எழுதியவர் : தமிழ் செல்வன்.ஏ (3-Oct-16, 8:10 pm)
சேர்த்தது : தமிழ் செல்வன்
Tanglish : puratchi thalaivi
பார்வை : 1380

மேலே