அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
பாா்வை ஒன்றே போதும்
அா்த்தங்கள் பல கூறும்
அம்மா! உன்னைத் தவிர வேறு
யாரால் என்னை உணர முடியும்
அம்மா! உன் அன்பு ஒன்றே போதும்
என்னை விழாமல் தாங்கிப் பிடிக்கும்
போகும் வழி எங்கும் என்னைக் காக்கும்
எனக்கென்று கொடுத்தாய் சுவாசம்
உனக்கென்றும் கொடுப்பேன் விசுவாசம்
எனக்கென்று கொடுத்தாய் இரத்தம்
உனக்கென்றும் கொடுப்பேன் இதயம்
எனக்கென்று கொடுத்தாய் இடம்
உனக்கென்றும் கொடுப்பேன் சுகம்
அம்மா! உன்னைத் தவிர வேறு
யாரால் என்னை உணர முடியும்