இதழால் குத்தி இதயத்தை கிழிக்காதே

இதழால் குத்தி இதயத்தை கிழிக்காதே....

ஆயிரம் பார்வைகள் கண்ட என் விழிகளும்
உன் விழிப்பார்வையிலே உறைந்து போய் நின்றதடா....
பல மொழிகள் அறிந்த வித்தகி இவளும்...
உன் விழி மொழி புரியாது இதழ் மூடி மௌனமாய் நின்றேனடா....

விழி முத்தத்தால் எனை விதிமுறையின்றி
வன்முறைகள் செய்தாயடா..
இதழ் முத்தத்தால் என் பெண்மையை
முழுதாய் நீயும் கொள்ளை கொண்டாயடா...

இதழால் யுத்தங்கள் செய்தாயடா...
இன்று இதழால் என் இதயம் கிழித்தே
விலகி நீயும் சென்றாயடா...
எனை வேண்டாம் என்றே உதறியவன்
என் உயிரை மட்டும் ஏனடா உதிரம் வழிய
எடுத்துச்சென்றாயடா......?

எழுதியவர் : அன்புடன் சகி (6-Oct-16, 1:20 pm)
பார்வை : 351

மேலே