கோவை சம்ஹார விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
சம்ஹார நல்விநாய கன்தாள் பணிந்தேத்த
நம்சங்க டங்கள் தொலைந்திடுமே - நம்வாழ்வில்
நன்மையே செய்து நலம்பல பெற்றிடுவோம்
என்றும் அவன்தாள் வணங்கு! 1
நம்சங்க டங்கள் தொலைந்திட என்றுமே
நம்வாழ்வில் நன்மைகளே செய்திடுவோம் - சம்ஹார
நல்விநாய கன்தாள் பணிந்தேத்த நாம்விரும்பும்
நல்லிசையும் நல்குவான் நன்று! 2

