சந்தன விநாயகர் - நேரிசை வெண்பாக்கள் மறு பதிவு

சந்தன நல்வினாய கன்தாள் வணங்கிட
எந்தவித சங்கடமும் நம்மையே - சந்ததமும்
அண்டாதே; உண்மையிது எந்நாளும் அன்னவனை
தண்டனிட்டு நித்தம் தொழு! 1

எந்நாளும் சந்தன நல்வினாய கன்தாளை
பந்தமொடு பாடிப் பரவிடவே - சந்தேகம்
ஏதுமுண்டோ? நல்வளங்கள் எல்லாம் நமக்கேதான்
தோதாகத் தந்திடுவான் தேறு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-16, 10:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே