சேலம் சாண்டல் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

சாண்டல் விநாயகன்தாள் சந்ததமும் நீதொழவே
வேண்டும் வரமருள்வான்; வல்வினைகள் - தீண்டாதே
இப்பொழு(து); இன்னமுதன் சாண்டல் விநாயகனை
எப்பொழுதும் போற்றித் துதி! 1

தினந்தோறும் சாண்டல் விநாயகனைக் கண்டு
மனமுருகி வேண்டிடவே மாறா - மனமகிழ்வு
நல்கிடுவான்; அன்னவனை நாள்தோறும் எண்ணியே
பல்லாண்டு போற்றிப் பணி! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-16, 10:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே