துளிரும் நாள் தூரத்திலில்லை
ஈகைமறந்த இனவெறி மனிதர்களின் விதிமீறல்களால் இன்று
ஈழம்கோரிய எம்மக்களின் தலைவனும் மறைந்திட...
ஈரமாகிப்போனது ஈழம்
எமைஈன்ற பெருமக்களின் கொடைக்குருதிகளால்...
வீரமாகிப்போனது கோரக்கொலைகள்
பேரம்பேசிய கிழட்டு நரியின் மலட்டுத்தனத்தால்...