பல விகற்ப பஃறொடை வெண்பா காலையிலே கண்விழிக்க தேடுகின்ற இன்பமெல்லாம்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
காலையிலே கண்விழிக்க தேடுகின்ற இன்பமெல்லாம்
ஆதவனின் பொன்கதிர்கள் பூமகளின் மேனியிலே
வீழும் இடமெல்லாம் மின்னுகின்ற காரணத்தால்
ஆதவனை மாதவனாய் காண்பார்க் ககிலத்தில்
வேறோர் சுவர்க்க மிலை
08-10-2016