ரசிப்பதற்கு மட்டும்

யாரோ எழுதிய
பொன்மொழியை
நான் ரசித்து
அனுப்பி வைக்கிறேன்
வாட்ஸ் அப்
மற்றும்
முகநூலில்
உனக்கு...
நீ
அவனுக்கும்
அவன்
வேறு ஒருவனுக்குமாய்
வேகமாய் பகிர்ந்து
கொள்ளப்படுகின்றன...
பொன்மொழிகள்
ரசிப்பதற்கு மட்டும்!