கனவொன்று கண்டேன்

கன்னி அவள் விரல் பிடித்து
கை கோர்த்து நான் செல்ல..
காளை என் உள்ளத்தை
கள்ளி அவள் களவாடிட...
முகம் மறைத்த வெட்கத்தை
முத்தத்தால் அகற்றிட...
தலையனையாய் தாய்மடியாய்
என்னவள் மடியில்
தலைசாய்த்திட...
அன்பை சுமந்து அரவணைத்து
தலைவியவள் தாயாய்
உருமாறிட...
இரவில் என் தோளில்
அவள் தலைசாய
இதழ் தின்ன முத்தங்களை
எண்ணிக்கொண்டிருக்கிறோம்
நட்சத்திரங்களை பார்த்தபடி..!!
இமையது மூடாமல்
இதயம் திறந்தபடி
இனிய
கனவொன்று
கண்டேன்..!!
குட்டி...!!