வடிக்கிறேன் கற்பனையில் வரிகளை

புன்னகை மொட்டுகளை உதிர்க்கிறாய்
பூக்களாய் மலர்கிறேன் என்னுள் ....
சூட்டுகிறேன் மலர்களை உன்கூந்தலில்
பூட்டுகிறேன் உள்ளத்தில் உனைவைத்து ...
வடிக்கிறேன் கற்பனையில் வரிகளை
முடிக்கிறேன் கவிதையை நெஞ்சினில் ...
படிக்கிறேன் செவிமடுக கொடியிடையே
துடிக்கிறேன் துயில்கொள்ள உன்மடியிலே ...
வலம்வருவோம் விண்ணில் இருவரும்
களம்காண்போம் காதலுடன் போர்புரிய !
காலைமுதல் மாலைவரை கழித்திடுவோம்
களிப்புடனே வாழ்ந்திருக்க வழிவகுப்போம் !
பழனி குமார்