என்னவள்

என்னவள்

காரிருள் சூழ்ந்திருந்தும்
அங்கே மழையில்லை
என்னவளின் கூந்தல்

நிலவுக்கு ஒரு
மச்சம் -
நெற்றியில் பொட்டு

சுனாமி அலைகள்
தோன்றியது கடலில் அல்ல
என்னவளின் கண்கள்

ரோஜாவுக்கு
ஒரு பனித்துளி-
அவளின் மூக்குத்தி

அசைகின்ற
ஓவியம்
-என்னவளின் இதழ்கள்

என்
இதயத்தின் துடிப்பு
அவள் கால்
-கொலுசின் ஓசை

அவள்
வலைவுகளால் அசைந்தாடும்
காவிரி

ஐந்தரை அடி
உயரம் கொண்ட
ஈபிள்கோபுரம்

அவள் அழகின் உச்சம் - இந்த
பூமி அவளின் மிச்சம் - அவளை
கண்டால் சரிந்திடும் என் நெஞ்சம் ...!!!

எழுதியவர் : நந்தகிரிஷ்ணன் (8-Oct-16, 10:09 pm)
சேர்த்தது : nanthakrishnan24
Tanglish : ennaval
பார்வை : 192

மேலே