இதுவா சுதந்திரம்

தீரவில்லை
சுதந்திரதாகம்..!
கிடைத்துவிட்டதா சுதந்திரம்
பெண்ணியத்திற்கு..?
கிடைத்துவிட்டதா சுதந்திரம்
வாழ்விற்கு..?
நாட்டிற்கு சுதந்தரமெனும்
அடைமொழிதான் எச்சம்!
ஆம்..!
தொலைந்துபோகிறது கலாச்சாரங்களின் சுவடுகள்..!
இதுவா சுதந்திரம்..?
புதைந்துபோகிறது பண்பாட்டின் தளிர்கள்..!
இதுவா சுதந்திரம்..?
எங்கிருந்தோ பெற்றுவிட்ட பண்பாடு,கலாச்சாரம்,
நிர்ணயிக்கிறது நம் வாழ்வை..!
இதுவா சுதந்திரம்..?
அன்னியரிடம் அடிமையாய் அன்று,
நமக்குள் நாமே அடிமையாய் இன்று..!
பெண்ணியத்தின் கண்ணியம்
சிதைவுறுத்தப்படுகிறது வலைதளங்களில்..!
இதுவா சுதந்திரம்..?
வரையறையில்லா சுதந்திரம்
வழிவகுப்பதேனோ சீர்குலைவை..!
இதுவா சுதந்திரம்..?
ஊடகத்திரையின்
பிண்ணணியில் திணறுகிறது..,
பெண்ணிய சுதந்திரம்..!
எல்லைமீறிய சுதந்திம்..,
புதைக்குழியின் கரங்களாய் வரவேற்கிறது..!
ஒற்றுமையில் திளைத்தது
அன்றைய பாரதம்..!
உற்றார் குருதி படர்ந்தாலும்,
பதறாத நெஞ்சங்களுடன்,
இன்றைய பாரதம்..!
மரணத்தின் தருவாயில்
கொண்டுசெல்லும் ஊடகம்..!,
சுயக்கட்டுப்பாடற்ற சுதந்திரத்தின்
இழிவுமுறையால்..!
இதுவா சுதந்திரம்..?
நம்மை ஆண்டவரின்
எஞ்சிய கலாச்சாரமும்.,
பண்பாடும்.,
நம் வாழ்வின் பக்கத்திற்கு
முன்னுரையாய் முன்வர..,
முடிவுரை எய்தியது
நம் நெறிமுறைகள்..,
உலர்ந்த மலர்கொத்துகளாய்..!
வேண்டுமோ இத்தகு சுதந்திரம்..?
எங்கே நம் தியாகிகள் வழிநடத்திய சுதந்திரம்?
எங்கே அகிம்சை சுதந்திரம்..?

எழுதியவர் : சரண்யா (10-Oct-16, 11:04 am)
பார்வை : 1009

மேலே