நடை விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
கையில் குடையேந்தி கம்பீர மாய்ச்செல்லும்
ஐயன் நடைநல் விநாயகனை - போயே
தினமும் வணங்கி தரிசனம் செய்தால்
மனங்கனிந்து வாழ்வோம் மகிழ்ந்து! 1
மண்ணில் நடைநல் விநாயகனை நம்பினோரை
கண்ணில் கருணையொடு காப்பானே – எண்ணத்தில்
நூற்றெட்டு போற்றிதனைச் சொல்லிப் புகழ்ந்துமே
சாற்றுவேன் அண்ணலின் பேர்! 2