காதல்
பூக்களை வருடி
தென்றல் வாசம்
பரப்பியது ....
குழலை வருடி
காற்று இசையை
பரப்பியது ....
தென்னையை வருடி
கீற்றில் எதோ
நிரப்பியது....
அவள் சேலையை வருடி
காற்று வண்ணம்
நிரப்பியது ....
அவள் பார்வையை வருடி
காற்று காதல்
நிரப்பியது ....