மனதை திருடிவிட்டாய் 555

அழகே...
அடர்த்தியான உன் கண் மை
இமைகளை திருத்தியதற்கு...
மறுநாள் முதல் கண்மையே
இல்லாமல் வந்து...
என்னை முழுவதும்
கிள்ளிப்போனாய்...
முகத்தை என்முன்னே காட்டி
மாற்றம் தெரிகிறதா என்றாய்...
ஒற்றைக்கல் மூக்குத்தி என்னை
இழுத்ததடி...
ஆசைப்பட்டு கேட்டதற்கு என்னிடம்
கழற்றி கொடுத்தாய்...
பலமுறை உன்னிடம் நான்
மனதை கேட்டும்...
என்னிடம் கொடுக்க
மறுப்பதென்னடி கண்ணே.....