தனிமைக்கு ஒரு நிறமுண்டு - சந்தோஷ்

அதீத இன்பம் யாதெனில்
தனியறைச் சாளரத்தினூடே
நிலவிடம் கவி வாசிப்பது.

தனியறை மென் இருட்டில்
நிலைக்கண்ணாடியில்
நிர்வாண மேனியை ரசிப்பது.

தனியறையில்
தனியாக இல்லாதது போல
வாசித்து விட்ட புத்தகங்களிடம்
விவாதம் செய்துக் கொண்டிருப்பது.

தனியறைச் சுவற்றில்
இரு பல்லிகளின்
கலவி ஒலியில்
கடவுளை கண்டறிவது.

தனியறை தனிமையில்
நான் என்பது மாயை
என உணர்ந்தவாறு...
ஒரு தற்காலிக
மரணத்திற்கு தயாராகுவது.

( தற்காலிக மரணம் - அன்றைய உறக்கம் )
**
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (11-Oct-16, 1:16 pm)
பார்வை : 108

மேலே