தாய்
உன்னோடு நான் வாழ
உதவி செய்தவள்தான்
என் தாய்!
உன்னிடம் என் தாயை
எப்போதும் தேட மாட்டேன்
அவளது அன்பும்
உனது அன்பும்
வேறுபட்டதுதான் என்பேன்!
ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையே
உண்டான தூரம் இன்று
ஒரு பெண்ணை நேசிக்கும் போது
அது இன்னும் அதிகமாச்சு என்பதுதான் உண்மை!
இது ஒன்றும் தவறில்லை
இது ஒரு இயற்கை என்பதை
அறிந்தவள்தான் தாய் என்பேன்!